ஸ்ரீவைகுண்டம சித்த மருத்துவ பிரிவு மற்றும் காசநோய் பிரிவு இணைந்து காசநோயாளிகளுக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது. தூத்துக்குடி மாவட்ட காசநோய் பிரிவு துணை இயக்குனர் சுந்தரலிங்கம் தலைமை வகித்தார். திருவைகுண்டம் அரசு மருத்துவ மனை தலைமை மருததுவர் வெங்கட்ரங்கன், சித்த மருத்துவர் ரதி செல்வம் உள்பட பலர் பேசினர். காசநோயாளிகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதற்கு மற்றும் உடல் எடை அதிகரிக்கவும் ப ஞ்ச முட்டி கஞ்சி எனப்படும் கஞ்சி இவ்விடத்தில் மாவட்டத்திலேயே முதல் முறை வழங்கப்பட்டது- மாவட்ட காசநோய் துரையை சேர்ந்த திட்ட ஒருங்கிணைப்பாளர் சந்தான சங்கர் வேல, செல்லப்பா ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். காசநோய் தீர்வு முறை அமைப்பாளர் குப்பு சாமி நன்றி கூறினார்.
இந்த நிகழ்ச்சி ஏற்பாடுகளை முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் மாரிமுத்து சுகாதார பார்வையாளர் சுதா மணிமேகலை மருந்தாளுனர் முத்துலெட்சுமி ஆகியோர் செய்திருந்தனர்.


