தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள செய்துங்கநல்லூர் சந்தையடியூர் தெற்கு தெருவைச் சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன். வேன் டிரைவர். இவருடைய மகன் அபிமன்யூ என்ற திலீப் (19). இவர் செய்துங்கநல்லூரில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் மெக்கானி பிரிவில் 3வது ஆண்டு பயின்று வருகிறார். நேற்று காலை வழக்கம் போல் கல்லூரிக்கு அவர் வந்தார். மதிய உணவிற்காக அவர் வீட்டிற்கு பைக்கில் 1 மணி அளவில் திரும்பி கொண்டிருந்தார். அப்போது செய்துங்கநல்லூர்& சிவந்திபட்டி ரோட்டில் ரயில்வே கேட் அருகே பைக் வந்தது. அப்போது 3 பைக்கில் வந்த சுமார் 7 பேர் அவரை வழி மறித்தனர். ஹெல்மெட் அணிந்திருந்த அவர்கள் அரிவாளுடன் அபி மணியை துரத்தினர். இதில் அதிர்ச்சியடைந்த அபிமணி மோட்டார் பைக் சாலையில் போட்டு விட்டு காட்டுக்குள் பயந்து ஓடினார். ஆனாலும் விடாமல் அந்த கும்பல் அவரை துரத்தி சரமாரியாக அரிவாளால் வெட்டியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அதன்பின்னர் அந்த கும்பல் அங்கிருந்து அவர்கள் வந்த பைக்கில் தப்பியோடினர்.
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு செய்துங்கநல்லூர் போலிஸ் இன்ஸ்பெக்டர் ரகுராஜன் தலைமையில் போலிசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். தூத்துக்குடி எஸ்.பி. அருண்பாலகோபாலன், ஸ்ரீவைகுண்டம் டிஎஸ்பி சுரேஷ்குமார் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். கல்லூரி அருகில் இருந்த காரணத்தினால் சம்பவ இடத்துக்கு பொதுமக்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் திரண்டனர் . இதனால் பெரும்பரபரப்பு ஏற்பட்டது. கல்லூரி மாணவர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதற்கிடையில் போலிஸ் விசாரணையில் கொலைக்கான காரணம் தெரியவந்தது. கடந்த ஏப்ரல் மாதம் இதே ஊரை சேர்ந்த சப்பானி மகன் ஆனந்த ராஜ் என்ற காமராஜ் (32) என்பவருக்கும்அபிமன்யூ என்ற தீலிப்பின் தாத்தா ஓய்வு பெற்ற பி.எஸ்.என்.எல். ஊழியர் காளிதாசன் என்பவருக்கும் கோயில் வரவு செலவு கணக்கு காட்டுவதில் தகராறு வந்துள்ளது. இதில் காமராஜை ஒரு கும்பல் வெட்டியது. இந்த வழக்கில் காளிதாசன் மகன் பொன்ராஜ் என்பவர் உள்பட4 பேர் மீதுவழக்கு உள்ளது. இந்த வழக்கில் அபிமன்யூ குற்றவாளியாவார். இந்த சம்பவத்துக்கு பலிக்கு பலி வாங்க இந்த சம்பவம் நடந்து இருக்கலாம் என கூறப்படுகிறது. இதில் ஆனந்த ராஜ் என்ற காமராஜ், அவரது சகோதரர் குமார்(40) உள்பட போலிசார் 7 பேர் மீது வழக்கு பதிவு செய்து தப்பி யோடியவர்கள் தேடி வருகிறார்.
இதற்காக போலிசார் தரப்பில் மூன்று தனிப்படை அமைக்கப் பட்டுள்ளது. இந்த படையினர் சிறுமனஞ்சி, விஜயநாரயணம் உள்பட பல பகுதியில் கொலையாளிகளை தேடி வருகிறார்கள். இந்த கொலை தூத்துக்குடி மாவட்டத்தில் தற்போது தொடர்ச்சியாக நடந்த கொலைகளில் 20 வது கொலையாகும். இதுகுறித்து எஸ்.பி.அருண் பாலகோபாலன் கூறும் போது, தூத்துக்குடி மாவடத்தில் தொடர்ந்து நடைபெறும் கொலைகள் தடுப்பு கூறித்து அனைத்துநடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது. இதில் உள் பகையால் ஏற்படும் கொலைகளையும் தடுக்க மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும். கல்லூரி மாணவர் கொலை சம்பந்தப்பட்டகொலையாளிகளை பிடிக்க மூன்று தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. செய்துங்கநல்லூரை சுற்றி 7 இடங்களில் செக்போஸ்ட் போடப்பட்டு போலிஸ் குவிக்கப்பட்டுள்ளது. விரைவில் குற்றவாளிகளை பிடிப்போம் என்று அவர் கூறினார்.
கல்லூரி மாணவர் அபிமன்யூ (எ) திலீப் உடலை போலிசார் கைபற்றி பாளை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அபி மணி தாயார் பொன்ராணி செய்துங்கநல்லூர் தனியார் பள்ளியில் சத்துணவு அமைப்பாளராக உள்ளார். இவருக்கு வளர்மதி என்ற தங்கையும், கண்ணன் என்ற தம்பியும் உள்ளனர். இவர்கள் சம்பவ இடத்துக்கு வந்து அபிமன்யூ உடலை பார்த்து கதறி அழுதது நெஞ்சை உருக்குவதாக இருந்தது. இந்த சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.