செய்துங்கநல்லூர் சேவியர் பாலிடெக்னிக் கல்லூரியில் வாக்காளர் அடையாள அட்டை சரிபார்க்கும் திட்ட முகாம் நடந்தது. கல்லூரி முதல்வர் ஆவுடையப்பன் தலைமை வகித்தார். துணை முதல்வர் அன்சலாம் ரோசர் முன்னிலை வகித்தார். வருவாய் ஆய்வாளர் முத்துலெட்சுமி வரவேற்றார். ஸ்ரீவைகுண்டம் துணை தாசில்தார் (தேர்தல்) சங்கரநாரயணன் வாக்காளர் அடையாள அட்டை சரிபார்ப்பு குறித்து படவிளக்கம் அளித்தார். ஆன் லைன் மூலம் எப்படி வாக்காளர் அடையாள அட்டையை சரிபார்க்கலாம், திருத்தலாம் என்பது குறிதது செயல் விளக்கம் அளிக்கப்பட்டது. செய்துங்கநல்லூர் கிராம நிர்வாக அலுவலர் சந்தனகுமார் நன்றி கூறினார். இதற்கான ஏற்பாடுகளை கல்லூரி தாளாளர் டாக்டர் ஸ்டிபன் தலைமையில் கல்லூரி ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் செய்திருந்தனர்.