
ஸ்ரீவைகுண்டம் தாலூகா புதிய அலுவலகம் தற்போது ஸ்ரீவைகுண்டம் புதுக்குடியில் புதிதாக கட்டப்பட்டுள்ளது. இந்த அலுவலம் தற்போது இயங்க ஆரம்பித்து விட்டது. இந்த அலுவலகத்துக்கு கருங்குளம் ஒன்றியம், ஸ்ரீவைகுண்டம் ஒன்றியம் உள்பட அனைத்து கிராமத்தில் இருந்தும் மக்கள் வரவேண்டியதுஉள்ளது. இந்த மக்கள் பொன்னங்குறிச்சி அல்லது ஸ்ரீவைகுண்டம் புதுக்குடியில் இறங்கி சுமார் 1 கிலோ மீட்டர் நடந்து செல்லவேண்டியது உள்ளது. எனவே புதிய தாலூகா அலுவலகம் முன்பு தமிழக அரசு அனைத்து பேருந்துகளும் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுகுறித்து தாசில்தார் முறைப்படி போக்குவரத்து அதிகாரிக்கு தகவல் அனுப்பியும் அரசு ஆணை அறிவிக்க காலதாமதபடுத்தி வருகிறார்கள். உள்ளூரில் அரசு போக்குவரத்து கழக டெப்போ இருந்தும் கூட நடவடிக்கை தாமதாமாக உள்ளது. எனவே உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும்.
த.குழந்தைஆழ்வார் – கிளாக்குளம்