ஸ்ரீவைகுண்டம் தாலூகா கருங்குளம் பஞ்சாயத்தில் புளியங்குளம், கிளாக்குளம் ஆகிய கிராமங்கள் உள்ளன. இந்த கிராமத்துக்கு செல்ல 5 கிலோ மீட்டர் சுற்றி வரவேண்டியது உள்ளது. கருங்குளம் கிராமசாவடி வழியாக பெரியகுளம், கிருஷ்ணகுளம் கரை வழியாக சென்றால் 1 கிலோ மீட்டரில் இந்த இரு ஊரையும் அடையலாம். இந்த குளத்து கரை வழியாக சாலை உள்ளது. இந்த சாலை மிக மோசமாக உள்ளது. இந்த சாலையை பிரதமர் சாலைகள் மேம் பாட்டு திட்டத்தின் கீழ் அமைத்து தந்தால் கிராம மக்கள் தாய் கிராமத்துக்கு வர ஏதுவாக இருக்கும். எனவே நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.
உ. பிரபாகரன் – கருங்குளம்