கருங்குளத்தில் மழை வேண்டி பெண்கள் தாமிரபரணிக்கு மஞ்சள் நீராட்டு நடத்தினர்.
கருங்குளம் குலசேகரநாயகி சமேத மார்த்தாண்டேஸ்வரர் ஆலயத்தில் இருந்து பெண்கள் ஊர்வலமாக கிளம்பினர். இந்த ஊர்வலத்துக்கு லெட்சுமி மகராஜன் தலைமை வகித்தார். ஊர்வலத்தினை இந்து அன்னையர் முன்னணி மாவட்ட பொதுச்செயலாளர் சரோஜா துவக்கிவைத்தார். ஊர்வலம் ஊர் சுற்றி தாமிரபரணி ஆற்றை அடைந்தது. அங்கு அம்மனுக்கு மஞ்சள் நீராட்டு நடந்தது. தொடர்ந்து மழைவேண்டி தாமிரபரணிக்கு மஞ்சள் நீராட்டு உள்பட பல பூஜைகள் நடந்தது. இந்த பூஜையை குணசேகரன் பட்டர், சேதுராமலிங்கம் உள்பட அர்ச்சகர்கள்செய்தனர். இந்த நிகழ்சச்ய கருங்குளம் இந்து அன்னையர் முன்னணி பொறுப்பளார்ள் சங்கரேஸ்வரி, கீதா ª லட்சுமி. இந்து முன்னணி கருங்குளம் ஒன்றிய தலைவர் இசக்கி முத்து உள்பட பலர் கலந்துகொண்டனர்.