செய்துங்கநல்லூரில் அரசின் உதவி தொகை பெற சிறப்பு பதிவு சேவை முகாம் நடந்தது. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் செய்துங்கநல்லூர் கிளை மாணவரணி சார்பாக சிறுபான்மை மாணவ மாணவிகளுக்கு சார்பில் அரசின் கல்வி உதவித்தொகை முகாம் அல் மஸ்ஜிதுன் நூர் பழைய பள்ளிவாசல் வைத்து நடைபெற்றது இதில் திரளான மக்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர் கலந்து கொண்டவர்கள் கிளைத் தலைவர் சாதிக் துணை தலைவர் வாசிம் மற்றும் உறுப்பினர்கள் ஜாபர் அல்தாப் ஹனிபா ஆகியோர் இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.