செய்துங்கநல்லூரில் பாப்புலர் பிராண்ட்ஆப் இந்தியா சார்பில் தேசிய பிரச்சார தெருமுனை கூட்டம் நடந்தது. டிவிஷன் செயலாளர் அபுஹீபைஸ் தலைமை தாங்கினார். மாவட்ட பேச்சாளர் அப்துல் ரஹ்மான் சிறப்புரையாற்றினார். அச்சமற்ற வாழ்வே கண்ணியமான வாழ்வு என்ற தலைப்பில் பாப்புலர் பிராண்ட ஆப்இந்தியா சார்பாக தூத்துக்குடி மாவட்டத்தில் 25 இடங்களில் தேசிய பிரச்சார தெருமுனை கூட்டம் நடத்த ஏற்பாடு செய்து அதன்முதல் கட்டமாக செய்துங்கநல்லூர் பஜாரில் இந்த கூட்டம் நடந்தது-. இந்த நிகழ்ச்சியில் அப்சர், பிலால், அசன், அப்துல்லா, பசீர், ஜலால், இப்ராகீம், தாரிக், ரியாஸ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.