கருங்குளம் – புளியங்குளம் சாலையை பிரதம மந்திரி கிராமச் சாலைகள் திட்டத்தின் கீழ்சேர்க்க கிராம மக்கள் நலக்குழுகோரிக்கை விடுத்துள்ளது.
கருங்குளம் மிகப்பெரிய பஞ்சாயத்து, இந்த பஞ்சாயத்தில் புளியங்குளம் மற்றும் கிளாக்குளம் ஆகிய கிராமங்கள் உள்ளன. இந்த கிராமத்து மக்கள் பஞ்சாயத்து அலுவலகம் வரவேண்டும் என்றால் சுமார் 8 கிலோ மீட்டர் சுற்றி தான் வரவேண்டும் . ஆனால் கருங்குளத்தில் இருந்து புளியங்குளம் மற்றும் கிளாக்குளம் செல்ல குளத்துக்கரையில் பாதை ஒன்று ஆண்டாண்டு காலமாக உள்ளது. இந்த பாதை நடைபாதையாக மாறிவிட்டது. தற்போது ஆக்கிரமிப்பு நிறைந்து ஒத்தயடி தடமாக மாறிவிட்டது. இந்த பாதையை பாரத பிரதமர் கிராமச்சாலைகள் திட்டத்தின் கீழ் சாலையாக மாற்றி தர பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து கிராம நல மக்கள் குழு செயலாளர் உடையார் கூறும் போது, கருங்குளம் பஞ்சாயத்தில் புளியங்குளம், கிளாக்குளம் என இரண்டு கிராமங்கள் உள்ளன. புளியங்குளத்தில் 800 வீடும் கிளாக்களத்தில் 300 வீடுகளும் உள்ளன. தில் 75 சதவீத மக்கள் தாழ்த்தப்பட்ட மக்கள். இவர்கள் தாய் கிராமம் கருங்குளத்திற்கு வந்து தான் பேரூந்து மற்றும் சுகாதாரம் உள்பட அனைத்து வசதிகளும் பெற வரவேண்டியது உள்ளது. இவர்கள் வந்து செல்ல ஏதுவாக குளக்கரை சாலை மிகவும் மோசமாக உள்ளதால் தற்போது 4 கிலோ மீட்டர் கடக்க வேண்டிய வழித்தடத்தினை 8 கிலோ மீட்டர் சுற்றி வருகிறார்கள். இதில் கிளாக்குளம் செல்லும் இடத்துக்கு வாய்க்கால் மீது ஒரு பாலம் கட்டி தரவேண்டியது உள்ளது. இந்த சாலை மற்றும் பாலத்தினை பாரத பிரதமர் கிராமச் சாலைகள் திட்டத்தின் செய்து தரவேண்டுகிறோம். மேலும் கருங்குளம் ஊருக்குள் உள்ள தார் சாலை மிக மோசமாக உள்ளது. இந்த சாலையையும் சீரமைத்து தரவேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
மக்களின் பிரச்சனை தீர்த்த கருங்குளத்தில் முக்கிய சாலை பிரச்சனையாக கருதப்படும் இந்த இரு சாலையை சீரமைத்து தர கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


