கொங்கராயகுறிச்சி அரசுமேல்நிலைப்பள்ளியில் நீர் மேலாண்மை விழிப்புணர்வு பேரணி நடந்தது. பள்ளி தலைமையாசிரியர் பேச்சிம்மாள் தலைமை வகித்தார். இந்த நிகழ்ச்சியில் 6 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு காமராஜர் பற்றிய கட்டுரைப்போட்டி, பேச்சுப்போட்டி உள்பட பல போட்டிகள் நடந்தது. போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. நீர் மேலாண்மை விழிப்புணர்வு பேரணியை தலைமை ஆசிரியை பேச்சியம்மாள் துவங்கி வைத்தார். பேரணி கொங்கராயகுறிச்சி முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் பள்ளி வளாகத்தினை அடைந்தது. இந்த பேரணியில் ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர். இதில நீரின் முக்கியத்துவம் குறித்து கோஷம் எழுப்பட்டது.
இதற்கான ஏற்பாடுகளை கொங்கராயகுறிச்சி அரசுமேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவ மாணவிகள் செய்திருந்தனர்.