கருங்குளம் – மூலைக்கரைப்பட்டி சாலையில் சாலை விரிவாக்கம் செய்தும் பாலம் விரிவாக்கம் செய்யப்படாத காரணத்தினால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. இதனால் பாலத்தினை அகலபடுத்த வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கருங்குளம் & மூலைக்கரைப்பட்டி சாலை , ஸ்ரீவைகுண்டம் நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமானது . இந்த சாலை சுமார் 15 கிலோ மீட்டர் தொலைவு கொண்டது. கருங்குளம் ஆற்றுப்பாலத் திட்டம் நிறைவேறிய காரணத்தினால் தூத்துக்குடியில் இருந்து நான்குநேரி தொழில் நுட்ப பூங்கா செல்ல இந்த சாலை மிக முக்கிய சாலையாக கருதப்படுகிறது. மேலும் கருங்குளத்தில் இருந்து தாதன்குளம், தெற்கு காரசேரி, அரசர்குளம் விலக்கு, வள்ளூவர் காலனி, சேரகுளம், இராமனுஜம்புதூர், சிந்தாமணி, முனைஞ்சி பட்டி, பெருமாள் புரம், மூலைக்கரைப்பட்டி, பேய்குளம், சாத்தான்குளம் உ ள்பட பல பகுதிக்கு செல்லும் வாகனங்கள் இந்த வழியாக த்தான் சென்று வருகிறது. தற்போது நான்குநேரி செல்லும் வாகன ஓட்டிகள் மிக அதிகமானவர்கள் இந்த சாலையை பயன்படுத்துக்கின்றனர்.
கடந்த 2013 ஆம் ஆண்டு சாத்தான்குளம் இடைத் தேர்தலையொட்டி அன்றைய தமிழக முதல்வர் ஜெயலலிதா பிரச்சாரத்துக்கு வந்த சமயத்தில் இந்த சாலை செம்மையாக அமைக்கப்பட்டது. அதன் பின் இந்த சாலையை யாரும் கண்டு கொள்ளவே இல்லை. இந்த சாலையில் அரசர்குளம் விலக்கு அருகே ஒரு ஓடை உள்ளது. அதன் மீது உள்ள பாலத்தினை அகலப்படுத்தாமல் ரோட்டை மட்டும் அகலபடுத்துயுள்ளனர் . இதனால் இருச்சக்கர வாகனத்தில் வருபவர்கள் சாலை உள்ளது என பயணம் செய்து, திடீர் பள்ளத்தில் சிக்கி, வாய்க்கால் பாலத்துக்கு வெளியே பாய்ந்து விடுகின்றனர். இதனால் பல விபத்துக்கள் ஏற்படுகிறது.
இதுகுறித்து அரசர்குளத்தினை சேர்ந்த அன்னராஜ் கூறும் போது, இந்த பாலத்தினை விரிவு படுத்த வேண்டும் என பல முறை கோரி வருகிறோம். சாலையை அகலப்படுத்தும் போதே பாலத்தினை அகலப்படுத்துவது தான் முறை . ஆனால் 5 ஆண்டுகளை கடந்தும் கூட சாலையை அகலபடுத்தி விட்டு பாலத்தினை மட்டும் அப்படியே விட்டு விட்டனர். இதனால் ஓரமாக செல்லும் வாகனம் எதிர்பாரத விதமாக பள்ளத்துக்குள் கவிழும் அவல நிலை உள்ளது. பாலம் கட்டும் வரை இந்த இடத்தில் ஒரு அறிவிப்பு பலகை அல்லது மிளிரும் விளக்கு அமைத்து தர வேண்டுகிறேன். என்றுஅவர் கூறியுள்ளார்.
இந்த இடத்தில் உள்ள பாலத்தினை விரிவு படுத்தி தரவேண்டும் என இந்த பகுதியில் உள்ள பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.