செய்துங்கநல்லூர் அருகே உள்ள மணக்கரை கீழ் ஊரில் இறந்த உடலை அருகிலுள்ள நடுவக்குறிச்சி கிராமத்தின் வழியாகக் கொண்டு செல்லும் பொழுது ஊர் பொதுமக்கள் மரித்து வைத்தனர் தகவலறிந்த முறப்பநாடு காவல்துறை ஆய்வாளர் பேச்சுவார்த்தை நடத்தி பின்பு சுடுகாட்டுக்கு எடுத்துச் செல்ல அனுமதிக்கப்பட்டது இதனால் அப்பகுதியில் சிறிது பரபரப்பு காணப்பட்டது.
மணக்கரை பஞ்சாயத்துக்கு உட்பட்ட மேலூர் கீழூர் வடக்கூர் நடுவக்குறிச்சி எனக் கிராமங்கள் உள்ளது இதில் மணக்கரை கீழே ஊரைச் சேர்ந்த வேலு மனைவி வள்ளி வயது 67 வயது முதிர்வின் காரணமாக உயிரிழந்தார் இறந்த உடலுடன் நடுவக்குறிச்சி அருகே உள்ள சுடுகாட்டுக்கு எடுத்துச் செல்லும் பொழுது ஊருக்குப் பின்புறமாகப் போக வேண்டியவர்கள் ஊரபுறமாக கொண்டுசென்றனர் இதை அறிந்த நடுவக்குறிச்சி ஊர் பொதுமக்கள் வழிமறித்தனர் எப்போதும் கொண்டு செல்லும் வழியில் கொண்டு செல்லாமல் ஏன் இந்த வழியாகக் கொண்டு செல்கிறீர்கள் என்று கேள்வி எழுப்பினர் இதுகுறித்து தகவல் அறிந்த முறப்பநாடு போலீஸ் இன்ஸ்பெக்டர் பார்த்திபன் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வந்து மணக்கரை பஞ்சாயத்துத் தலைவர் அருணாசலம் வடிவு சீனி பாண்டியன் மணக்கரை கிராம நிர்வாக அதிகாரி இரு சமுதாயத்து மக்களிடம் சுமுகமான பேச்சுவார்த்தை நடத்தினர் பேச்சுவார்த்தைக்குப் பின்பு உடலைச் சுடுகாட்டுக்கு எடுத்துச் செல்ல அனுமதித்தனர்.
அப்பொழுது மணக்கரை கிழ ஊரைச் சார்ந்தவர்கள் நாங்கள் சென்ற முறை இப்படித்தான் கொண்டு சென்றோம் என்று கூறினர், இதற்குப் பதிலளித்த நடுவக்குறிச்சி ஊர் பொதுமக்கள் ஏற்கனவே அவர்கள் இறந்த உடலைக் கொண்டு வரும்பொழுது மழை பெய்து வந்த காரணத்தினால் மனிதாபிமான முறையில் ஊருக்குள் கொண்ட செல்ல அனுமதித்தோம் இதனால் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னதாகவே முறப்பநாடு போலீசில் இரண்டு ஊர் மக்களும் போய் இந்த வழியாகப் போக மாட்டோம் என்று எழுதிக் கொடுத்து உள்ளார்கள் இப்பொழுது மீண்டும் அதே செயலை செய்திருக்கிறார்கள் என்று நடுவகுறிசி பொதுமக்கள் தெரிவித்தனர் பின்பு மணக்கரை கீழ் ஊரைச் சார்ந்தவர்கள் எங்களுக்கு ஊருக்கு அருகாமையிலேயே சுடுகாட்டுக்கு இடம் ஒதுக்கித் தரும்படி கோரிக்கை வைத்தனர் முறப்பநாடு போலீசார் பார்த்திபன் மணக்கரை பஞ்சாயத்துத் தலைவர் கிராம அலுவலர் இந்த கோரிக்கையை ஏற்று இது குறித்து பரிசீலனை பண்ணி இடம் ஒதுக்கித் தருவதாக உறுதி அளித்தார்கள் பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து சுமுகமான சூழ்நிலை ஏற்பட்டது.


