செய்துங்கநல்லூரில் உள்ள கருங்குளம் ஒன்றிய அலுவலகத்தில் ஒருவருக்கு கொரோனா நோய்ப் பாதிப்பு ஏற்பட்ட காரணத்தினால் அலுவலகம் மூடப்பட்டது.
செய்துங்கநல்லூர் மெயின்ரோட்டில் கருங்குளம் ஒன்றிய அலுவலகம் இயங்கி வருகிறது. இந்த அலுவலகத்தின் மூலம் கருங்குளம் ஒன்றியத்தில் உள்ள 31 பஞ்சாயத்து அலுவல் மிகச்சிறப்பாக நடந்து வருகிறது. ஒவ்வொரு பஞ்சாயத்திலும் கொரோனா தடுப்பு நடவடிக்கை இந்த அலுவலகம் மூலமாகத்தான் நடந்து வருகிறது. எனவே இங்கு பணியாளர்கள் ஓய்வின்றி பணிபுரிந்து வந்தனர். இதற்கிடையில் இன்று இங்கு பணிபுரிந்த அலுவலர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிப் படுத்தப்பட்டது. எனவே உடனடியாக அலுவலகத்தில் இருந்து அனைவரையும் வெளியேற்றி, அலுவலகம் மூடப்பட்டது. ஏற்கனவே தூத்துக்குடி மாவட்டத்தில் முதல் முதலாக கொரோனா தொற்று செய்துங்கநல்லூரில் தான் கண்டறியப்பட்டது. இதற்கிடையில் 1 வாரம் செய்துங்கநல்லூரில் மட்டும் முழு அடைப்பு வியாபாரிகள் சங்க சார்பில் நடந்தப்பட்டது. தற்போது அலுவலக ஊழியர்களுக்கே கொரோனா தொற்று வந்திருப்பது, இப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
====


