தூத்துக்குடி மட்டக்கடை தெருவில் வசித்துவருபவர் முனைவர் அழகேசன். இவர் மனோண்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக தமிழ்த் துறையில் முன்னாள் தலைவராக பணியாற்றினர். தூத்துக்குடியில் முத்துநகர் இலக்கிய வட்டத்தினை நிறுவித் தொடர்ந்து நடத்தி வருகிறார். மேலும் தொல்காப்பியர் மீது பற்று கொண்டு பல்வேறு இலக்கிய நூல்களை எழுதி வருகிறார். இவர் பணி ஓய்வு பெற்ற பிறகு தூத்துக்குடி மட்டக்கடை பகுதியில் இருந்த உலகம் முழுவதும் பல்வேறு தமிழ்ப் பணிகள் ஆற்றி வந்தார். இவர் கடந்த மூன்று மாதங்களாக உடல் நிலை பாதித்து மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இன்று காலை சிகிச்சை பலனளிக்காமல் அவர் உயிரிழந்தார். இவருக்கு பல்வேறு தமிழ் அமைப்பைச் சேர்ந்தவர்கள் அஞ்சலி செலுத்தினர்.


