செய்துங்கநல்லூர் சுந்தர் நகரை சேர்ந்தவர் ராஜன் செல்வின். இவர் தனது மனைவி ஜெயசீலி, மகன் டேனில் சீரோன், மகள் அக்ஷல் ஆகியோருடன் வசித்துவருகிறார்கள். ராஜன் செல்வின் குடிபழக்கம் கொண்டவர். ஆகவே அவரால் வேலைக்கு செல்ல இயலவில்லை. எனவே ஜெயசீலி தோட்ட வேலை மற்றும் கூலி வேலைக்கு சென்று குடும்பத்தினை காப்பாற்றியுள்ளார். ஜெயசீலி கடந்த 6 மாத காலங்களுக்கு முன்பு அருகில் உள்ள ஸ்ரீராமன்குளம் ராஜாகிளமண்டு(52) என்பவர் தோட்டத்தில் பூப்பறிக்கும் வேலை செய்து வந்தார். கடந்த 6 மாத காலமாக ஜெயசீலி அங்கு வேலைக்கு செல்லாமல் வேறு இடத்தில் வேலை செய்து வந்தாராம். இதனால் ஆத்திரமடைந்த ராஜா கிளமண்டு தன் தோட்டத்துக்குதான் வேலைக்கு வரவேண்டும் என கடந்த 11 ந்தேதி சுந்தர் நகரில் உள்ள ஜெயசீலி வீட்டில் வந்து தகராறு செய்துள்ளார். அதை ஜெயசீலி மகன் டேனியல் சீரோன் தட்டிக்கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ராஜா அரிவாளால் டேனியல் சீரோனை வெட்டினார். ரத்த வெள்ளத்தில் மிதந்த டேனியல் சீரோனை சிகிச்சைக்காக பாளை அரசு மருத்து மனையில் கொண்டு சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து செய்துங்கநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அருள் ரோஸ்சிங் வழக்கு பதிவு செய்து ராஜா கிளமண்டையை கைது செய்தனர்.
—