அமல்படுத்தப்பட்டு உள்ளதால் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு வெறிச்சோடி காணப்படுகிறது.
தூத்துக்குடி மாவட்டம் ஏரல் முக்கிய வணிக நகராக விளங்குகிறது. இங்கு சுமார் 650 க்கும் மேற்பட்ட சிறிய மற்றும் பெரிய கடைகள் உள்ளன.
இந்நிலையில் கடந்த மாதம் முதல் ஏரலில் கொரானா தொற்று அதிகரித்து வருகிறது.
கடந்த மாதம் ஏரல் காவல் நிலைய காவல் ஆய்வாளர் உள்ளிட்ட காவலர்களுக்கு கொரானா உறுதிப்படுத்தப்பட்டது.
இந்நிலையில் ஏரலில் உள்ள கடைக்காரர்கள் மற்றும் கடையில் பணிபுரிபவர்களுக்கும் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டு வருகிறது.
இதனைத்தொடர்ந்து ஏரலில் கொரோனா தொற்று சமூக பரவலாக மாறுவதை தடுக்கும் விதமாக ஒரு வார காலத்திற்கு முழு ஊரடங்கு அமல்படுத்த அனைத்து வியாபாரிகள் சங்கத்தினர் முடிவெடுத்தனர்.
இதன்படி ஏரலில் பால் மற்றும் மெடிக்கல் கடைகளைத் தவிர மற்ற அனைத்துக் கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன.
வருகிற ஞாயிற்றுக்கிழமை வரை அனைத்து கடைகளும் அடைக்கப்படும் நிலையில் எப்பொழுதும் பரபரப்புடன் காணப்படும் ஏரல் கடைவீதிகள் மற்றும் சாலைகள் பொதுமக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது.


