செய்துங்கநல்லூரில் கருங்குளம் யூனியன் அலுவலகத்தில் தொழில் செய்யும் மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு கொராணா சிறப்பு நிதி உதவி வழங்கப்பட்டது.
செய்துங்கநல்லூர் இல் உள்ள கருங்குளம் யூனியன் அலுவலகத்தில் கொராணா சிறப்பு நிதி உதவியாக தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்டத்தின் கீழ் இரண்டாவது கட்டமாக கருங்குளம் யூனியனுக்கு உட்பட்ட முப்பத்தொரு ஊராட்சிகளில் உள்ள தொழில் செய்யும் மகளிர் சுய உதவிக்குழு மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்கு சிறப்பு நிதி உதவி தொகுப்பு மொத்தம் சுமார் 62 லட்சம் மதிப்புள்ள உதவித்தொகையை சமூக விலகலை கடைபிடித்து பயனாளிகளுக்கு யூனியன் சேர்மன் கோமதி ராஜேந்திரன் தலைமையில் வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் யூனியன் சேர்மன் கோமதி ராஜேந்திரன் பி, டி, ஓ சுப்புலட்சுமி, வெங்கடாசலம், தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்டத்தின் மாவட்ட திட்ட செயலாளர் மாரிச்சாமி, செயல் அலுவலர் ராதா, மகளிர் சுய உதவி குழு வட்டார அலுவலர் மல்லிகா,அரசு ஒப்பந்தகாரர் ராஜேந்திரன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், 5வது வார்டு ஒன்றியக் கவுன்சிலர் முத்துராமலிங்கம், உள்பட கலந்துகொண்டனர்.