செய்துங்கநல்லூர் எம்.எம். நடுநிலைப்பள்ளியில் படித்து தற்போது பல்வேறு துறையில் பயணம் செய்து வரும் முன்னாள் மாணவர்களின் கூடுகை நடத்த முடிவு செய்தனர். அதற்கான ஆயத்த கூட்டம் செய்துங்கநல்லூரில் உள்ள வெங்கடேஸ்வரா மகாலில் நடந்தது. எம்.எம்.பள்ளி முன்னாள் ஆசிரியர் துரைராஜ் தலைமை வகித்தார். இராமனுஜம்புதூர் துவக்கப்பள்ளி முன்னாள் தலைமை ஆசிரியர் மாரியப்பன் முன்னிலை வகித்தார்.
ஆசிரியர் செல்வம், காவலர் ஆறுமுகநயினார், போக்குவரத்து ஜீவானந்தம், நூலகர் பாலமுருகன், முன்னாள் ஊராட்சி உறுப்பினர் முத்துசாமி, எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு உள்பட பலர் பேசினர். எம்.எம்.பள்ளியில் தாங்கள் படித்த போது பணிபுரிந்த ஆசிரியர்களையும், தற்போது பணிபுரிந்து வரும் ஆசிரியர்கள், பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் தாளாரை அழைத்து கௌரவிக்க வேண்டும். பள்ளி மாணவ மாணவிகளுக்கு தேவையானதை செய்து கொடுக்க வேண்டும் என்பது உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
இதற்கான ஏற்பாடுகளை சுப்பையா , மாயாண்டி மற்றம் முன்னால் மாணவர்கள் இணைந்து செய்திருந்தனர்.


