செய்துங்கநல்லூர் அருகில் உள்ள வடக்கு வெட்டியபந்தி இந்தியதேவ சபை பேராலயம் 23 ஆம் ஆண்டு நிறைவு விழா, வசவப்புரம் முதியோர் கருணை இல்லம் 14 ஆம் ஆண்டு துவக்கவிழா நடந்தது. வடக்கு வெட்டியபந்தி இந்திய தேவ சபை பேராலயத்தில் நடந்த விழாவிற்கு சின்ன அம்மா ஆபிரகாம் தலைமை வகித்தார். இந்திய தேவ சபைகளின் அனைத்து போதகர்களும் முன்னிலை வகித்தனர். டில்யில் மெல்கிசேதேக் ஊழியங்கள் அருள்ஜோஸ்லின் சிறப்பு செய்திகளை வழங்கினார். ஆண்டு விழாவில் விருதுநகர் காவல் துணை கண்காணிப்பாளர் விஜய குமார், முறப்பநாடு காவல் துறை ஆய்வாளர் பார்த்திபன், சாயர்புரம் போப் கல்லூரி முதல்வர் டாக்டர் இம்மானுவேல், மாவட்ட கவுன்சிலர் பேச்சியம்மாள், ஓய்வு பெற்ற சப்இன்ஸ்பெக்டர் முருகன், எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு ஆகியோர் கலந்துகொண்டுபேசினர்.
நிகழ்ச்சியில் ஆண்டறிக்கை வாசிக்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை பாஸ்டர் ஜெ. டைட்டஸ் ஞானசித்தர் மற்றும் இந்திய தேவசபை பேராலய மக்கள்செய்திருந்தனர்.
வடக்கு வெட்டியபந்தி முதியோர் இல்ல ஆண்டு விழா நடந்தது. நானும் சென்று கலந்துகொண்டேன். இதை நடத்தும் போதகர் டைட்டஸ் ஞானசித்தர் இறைபணியாக அவர் ஆலயத்தில் போதகராக பணியாற்றினாலும் இந்திய தேவசபைகளின் பிஷப்பாக செயல் பட்டாலும் அனைத்து மதத்தினரையும், அனைத்து அரசு துறை ஊழியர்கள் மற்றும் காவலர்களை அரவணைத்து நிகழ்ச்சியை நடத்துவார். இந்த ஆண்டு ஒரு படி மேலே போய் தூத்துக்குடி மாவட்ட 13 வது வார்டு கவுன்சிலர் பேச்சியம்மாளையும் அழைத்து கௌரவப்படுத்தினார்கள்.
விருதுநகர் டிஎஸ்பி விஜயகுமார்,, சாயர்புரம் போப் கல்லூரி முதல்வர் இம்மானுவேல், முறப்பநாடு இன்ஸ்பெக்டர் பார்தீபன், ஓய்வுபெற்ற சப் இன்ஸ்பெக்டர் முருகன் உள்பட பல்வேறு வி.ஐ.பிகள் பேசினர். கிறிஸ்தவ போதகர்கள், சுமார் 20க்கு மேற்பட்டவர்கள் மத்தியில் பேச எனக்கு வாய்ப்பு கிட்டியது. டைட்டஸ் பாஸ்டர் அவர்களின் சமூக பணி மீது எப்போதுமே எனக்கு ஒரு அலாதி பிரியம் உண்டு. குறிப்பாக இலவச ஆம்புலன்ஸ் வசதி, பசித்தோரும் தினம் 100 பேருக்கு உணவு வழங்குதல், முதியோரை பராமரித்தல், மன வளர்ச்சி குன்றியோரை கண்டு பிடித்து , அவர்கள் முடியை திருத்தி, குளிக்க வைத்து புதிய உடை உடுத்துவது என பல்வேறு பணிகள். இலவச கண்சிகிச்சை முகாம் அவரது சமுக பணியில் மற்றுமொரு மைல் கல்.
ஆகா. ஏழையின் சிரிப்பில் இறைவனை காணலாம் என்பார்களே. இவர் சமூக சேவையில் அல்லவா இறைவனை நமக்கு காட்டுகிறார். வாழ்த்துக்கள் பாஸ்டர்.
புத்தகம் எழுதுவது கடினம், பத்திரிக்கை நடத்துவது அதை விட கடினம். ஆனால் இவர் மாதந்தோறும் அன்பொளி என்னும் இதழ் நடத்தி சுமார் 2500 பேருக்கு இலவசமாக கொடுத்து வருகிறார்கள். இவர் பணியின் மற்றொரு மைல் கல் இது.
இவரின் சேவையில் எனக்கு ரேணியஸ் அய்யர் செய்த கல்வி பணியும், கால்டுவெல் இந்த திருநெல்வேலிக்கு செய்த வரலாற்று பணியும் தான் தெரிகிறது. கால்டுவெல் அவர்களின் மனைவி எலிசா மகளிருக்காக பல்வேறு பணிகளை செய்தார். தற்போது இடையன்குடி சென்றாலும் அதை பற்றி அறியலாம். அதுபோலவே இங்கு டைட்டஸ் பாஸ்டர் அம்மா செய்யும் பணி மிக அதிகம். எனவே தான் பாஸ்டரம்மாவுக்கு நமது மாவட்ட கவுன்சிலர் பேச்சியம்மாள் மூலமாக பொன்னாடை போர்த்தி கௌரவித்தோம்.
இது எனக்கு மனநிறைவை தந்தது இந்த நிகழ்ச்சி.& எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு


