செய்துங்கநல்லூரில் உள்ள மகளிர் கூட்ட அரங்களில் வல்லநாடு தெற்கு ஒன்றிய நடுநிலைப்பள்ளி சத்துணவு அமைப்பாளர் காசிமணி ஓய்வு பெற்றதை முன்னிட்டு பிரிவு உபச்சார விழாநடந்தது. சத்துணவு கருங்குளம் வட்டார தலைவர் ஸ்ரீனிவாசன் தலைமை வகித்தார். ஒன்றிய ஆணையாளர் சுப்புலெட்சுமி, கூடுதல் ஆணையாளர் வெங்கிடாசலம், மாவட்ட துணை தலைவர் வேல்முருகன் ஆகியோர் முன்னிலை வகிததனர். வட்டார செயலாளர் உமா பகவதி வரவேற்றார். நிகழ்ச்சியில் சத்துணவு மேலாளர் சுல்தான், சத்துணவு ஊழியர் சங்க மாநில துணைதலைவர் தமிழரசன், கவிஞர் ஆழிகுடி துரைப்பாண்டியன்,எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு, மு.புதுக்கிராமம் பஞ்சாயத்து துணை தலைவர் சுப்பிரமணியன், டாக்டர் மகாராஜன், ஆறுமுகம் உள்பட பலர் கலந்துகொண்டனர். வட்டார பொருளாளர் பண்டாரம் நன்றி கூறினார். காசி மணி ஏற்புரை வழங்கினார்.


