தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே ஆறாம்பண்ணை பகுதியில் மேய்ச்சலுக்கு சென்ற ஆடுகள் அடிக்கடி திருட போனது. இதுகுறித்த புகாரின் பேரில் முறப்பநாடு போலிசார் வழக்குப்பதிவு செய்து, ஆடு திருடிய கும்பலை வலை வீசி தேடி வந்தனர்.
இந்த நிலையில் முறப்பநாடு போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தி தலைமையில் போலீசார் நேற்று முன்தினம் ஆறாம்பண்ணை பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது காட்டுப்பகுதியில் மேய்ச்சலுக்கு சென்ற ஆடுகளை சிலர் திருடிச்சென்று காரில் ஏற்றி கடத்தி செல்ல முயன்றனர். அப்போது அந்த நபர்களை போலீசார் கையும் களவுமாக பிடித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில அவர்கள் நெல்லையை அடுத்த மேலப்பாளையத்தைச் சேர்ந்த ராமன் மகன் மாயாண்டி (வயது 21). கிருஷ்ணன் மகன் சங்கர்(19), ராமச்சந்திரன் மகன் பகவதி ராஜ் (20), இசக்கி முத்துமகன் மருதுவீரன்(20). சுடலை முத்து மகன் சுந்தரவேல் (19), என்பதும் அவர்கள் 5 பேரும் சேர்ந்து பல்வேறு இடங்களில் ஆடுகளை திருடிச்சென்று, அவற்றை இறைச்சிக் கடைகளில வெட்டி, விற்றதும் தெரிய வந்தது. அவர்கள் ஆடுகளை திருடுவதற்கு பயன்படுத்திய மினி லாரியையும் போலீசார் பறி முதல் செயதனர்.
கைதான 5 பேரையும் பேரீசார் ஸ்ரீவைகுண்டம் கோர்டில் ஆஜர் படுத்தி, பேரூரணி யில் உள்ள மாவட்ட சிறையில் அடைத்தனர்.
இதுபோல் சிவந்தி பட்டி போலிஸ் சரகம், கிருஷ்ணபுரம் அருகில் உள்ள பெரக்காநகரில் காரில் ஒரு கும்பல் ஆட்டு குட்டிகளை கடத்தியுள்ளனர். அந்த கும்பலுக்கு இவர்களுக்கும் தொடர்ப்பு உண்டா என போலிசார் விசாரித்து வருகின்றனர்.
ஆறாம்பண்ணையில் உள்ள பள்ளிவாசல் சி.சி.டி.வி கமராவில் இதுபோன்ற கும்பல் ஆட்டுகுட்டியை கடத்திய காட்சி பதிவாகிறது. இவற்¬ றயெல்லாம் ஆதாரமாக கொண்டு மேலும் விசாரணை முடுக்கி விடப்பட்டுளளது.


