செய்துங்கநல்லூர் செயின்ட் சேவியர் பாலிடெக்னிக் கல்லூரியில் ரத்த தான முகாம் நடந்தது. கல்லூரி முதல்வர் ஆவுடைப்பன் தலைமை வகித்தார். துணை முதலவர் அன்சலாம் ரோசர் முன்னிலை வகித்தார். கருங்குளம் ஆரம்ப அரசு சுகாதர நிலைய தலைமை மருத்துவர் மேரி ஸ்டெல்லா ஜெயந்தி , பாளை அரசு மருத்துவ மனை ரத்த தான வங்கி மருத்துவர் புனிதா உள்பட மருத்துவ குழுவினர் மாணவர்களிடம் ரத்தம் சேகரித்தனர். இந்த நிகழ்ச்சியில் வட்டார சுகாதர மேற்பார்வையாளர் பெரியசாமி, சுகாதார ஆய்வாளர் சீனிவாசன், சண்முகபெருமாள், கிராம செவிலியர்கள் மீனாட்சி, விவேகானந்த விஜயா, பொன்பாப்பா, மைதிலி உள்பட பலர்கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் கல்லூரி நாட்டுநலப்பணித்திட்ட அலுவலர் ஆறுமுகசேகர் மற்றும் மாணவர்கள் ஒருங்கிணைத்தனர். உடற்கல்வி இயக்குனர் ராகுல், பேராசிரியர் சுப்பரமணியன், சாகுல் அமீது, அலுவலக கண்காணிப்பாளர் கணேசன் உள்பட பலர் கலந்துகொண்டனர். ஏற்பாடுகளை கல்லூரி தளாளார் டாக்டர் ஸ்டிபன் தலைமையில் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர்.