செய்துங்கநல்லூர் செயிண்ட் மேரீஸ் கல்வியல் கல்லூரியில் பொங்கல் விழா நடந்தது.
கல்லூரி முதல்வர் நிம்மி ரென் தலைமை வகித்தார். அலுவலக கண்காணிப்பாளர் ஜுலியன் ராயன் முன்னிலை வகித்தார். இந்த நிகழ்ச்சியில் 10 பிரிவுகளாக மாணவிகள் பொங்கல் வைத்தனர். பேராசிரியர்கள் கிங்ஸ்டன், மணி ராஜ், உதவி பேராசிரியர்கள் ஐஸ்வரியா, மஞ்சு, மது பிரியா, சுப்பு லெட்சுமி, அலுவலக உதவியாளர்கள் செல்வின், ராஜ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.