கருங்குளம் கள்ளவாண்ட சுவாமி கோயில் அருகில் உள்ள விளையாட்டு திடலில் அம்மா இளைஞர் விளையாட்டு திட்டத்தினை கருங்குளம் சேர்மன் கோமதி ராஜேந்திரன் துவக்கி வைத்தார்.
கருங்குளம் ஊராட்சி மன்ற தலைவர் உதயசங்கர் தலைமை வகித்தார். கருங்குளம் ஒன்றிய ஆணையாளர் சுப்பு லெட்சுமி, கூடுதல் ஆணையாளர் வெங்கடாசலம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கருங்குளத்தில் வாலி பால், கபாடி, டென்னிஸ் போன்ற விளையாட்டுகளுக்கான திடல் அமைக்கப்பட்டிருந்தது. இந்த திடல் பஞ்சாயத்துக்கு ஒன்று அமைக்கப்பட்டு, ஒன்றியத்துக்குள் பட்ட பஞ்சாயத்துகளுக்கு போட்டி நடத்தி, அதில் வெற்றி பெற்றவர்களை, மாவட்ட அளவில் போட்டியில் பங்கு பெற செய்வார்கள். அதன் பின் மாநில அளவில் போட்டி நடந்தி, அவர்களை பல் வேறு போட்டிகளில் தேர்ந்தெடுத்து தமிழ் நாடு அணி மூலம் விளையாட நடவடிக்கை எடுப்பார்கள். எனவே இந்த விளையாட்டு முக்கியத்துவம் வாய்ந்தது, இதை கிராம புற இளைஞர்கள் நன்றாக பயன்படுத்தி கொள்ள வேண்டும் என மாவட் விளையாட்டு அலுவலக பயிற்சியாளர் அசோக்குமார் பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய கவுன்சிலர்கள் சுப்பு லெட்சுமி, மாடத்தி, முத்துராமலிங்கம், ஒன்றிய பணி மேற்பார்வையாளர் ஜெய்சங்கர், கூடை பந்து பயிற்சியாளர ஜெயரத்தினகுமார், கனகராஜ் உள்பட பலர் கலந்துகொண்டனர். துணை தலைவர் கணேசன் நன்றி கூறினார். இதற்கான ஏற்பாடுகளை ஊராட்சி செயலர் சோமு உள்பட பஞ்சாயத்து நிர்வாகம் செய்திருந்தது.


