வணக்கம் மும்பை நாளிதழின் தமிழ்நாடு சிறப்பு செய்தியாளரும், எழுத்தாளருமான முத்தாலங்குறிச்சி காமராசு தலைமையில் ஸ்ரீவைகுண்டம் பகுதி நிருபர்கள் தூத்துக்குடி மாவட்ட ஆட்சி தலைவர் சந்திப் நந்தூரியை சந்தித்து புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்தனர். தாமிரபரணி ஆற்றினை சுத்தப்படுத்த நடவடிக்கை எடுத்தது. ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டில் உள்ள அமலை செடிகளை ஸ்ரீவைகுண்டம் தாசில்தார் சந்திரன் மூலமாக அகற்றியது. ஆதிச்சநல்லூர், சிவகளை, தாமிரபரணி ஆற்றங்கரையில் உள்ள இடங்களில் அகழாய்வு செய்ய நடவடிக்கை எடுத்தது. குலசேகரபட்டினத்தில் ராக்கெட் தளம் அமைக்க அடிப்படை வேலை செய்தது உள்பட பல பணிகள் செய்த வகைக்காக நன்றி தெரிவிக்கப்பட்டது. இந்த சந்திப்பில் நிருபர்கள் தினகரன், ஞானதுரை, பார்த்தீப சங்கர், குமாரவேல், சுடலைமணி செல்வன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


