
நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை மாவட்ட மைய நூலகத்தில் புத்தகங்களோடு புத்தாண்டை கொண்டாடுவோம் என்ற தலைப்பில் புத்தக கண்காட்சி நடந்தது.
வாசகர் வட்ட தலைவர் மரிய சூசை தலைமை வகித்தார். தேசிய வாசிப்பு இயக்க தலைவர் தம்பான், நல் நூலகர் முத்துகிருஷ்ணன், தேசிய வாசிப்பு இயக்க பொருளாளர் பாலாஜி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பாளையங்கோட்டை காவல்துறை துணை கண்காணிப்பாளர் பெரியசாமி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.
எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு, நாறும் பூ நாதர், பாளை ஜான்ஸ் கல்லூரி இயற்பியல் பேராசிரியர் ராமசாமி ஆகியோர் சிறப்புரையாற்றினர். ராம்சங்கர் எழுதிய உள்ளேயிருந்து சில குரல்கள் நூலை வாசகர் வட்ட துணைத்தலைவர் டாக்டர் கணபதி சுப்பிரமணியனும், கவிஞர் சிற்பி பாமா எழுதிய மனிதனின் மறுபக்கம் நூலை தேசிய வாசிப்பு இயக்க செயலாளர் கா. சரவணக்குமார் ஆகியோர் அறிமுக படுத்தி பேசினர்.
வாசகர் வட்டத்தினை சேர்ந்த பாலசுப்பிரமணின் கணபதியப்பன் , பெனிட்டா பிரேம்குமார் தேசிய வாசிப்பு இயக்க கௌரவ ஆலோசகர் ஆறுமுக நயினார், இந்து கல்லூரி பேராசிரியர் ஹரிஹரசுப்பிரமணியன், துணைத் தலைவர் டாக்டர் மோகன பிரியா உள்பட பலர் பேசினர்.
மாவட்ட மைய நூலக நூலகர் முத்துலெட்சுமி நன்றி கூறினார்.