செய்துங்கநல்லூரில் திமுக ஒன்றிய கவுன்சிலர் வேட்பாளர் சுந்தரி குமார் வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தார்.
செய்துங்கநல்லூரில் திமுக கட்சி சார்பில் ஒன்றிய கவுன்சிலர் 12 வது வார்டுக்கு போட்டியிடும் முன்னாள் பஞ்சாயத்து தலைவர் சுந்தரி குமார் வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தார். இவர் செய்துங்கநல்லூர் மேலத்தெரு, கஸ்பா வேளார் தெரு, ரயில்வே பீடர் தெரு, மெயின்தெரு, தென்னஞ்சோலை தெற்குத் தெரு, அய்யனார்குளம் பட்டி, எஸ்.என்.பட்டி, கலைஞர் நகர், சந்தையடியூர், கரையடியூர், மேலத்தூதுகுழி, கீழத்தூதுகுழி, செய்துங்கநல்லூரில் உள்ள முஸ்லீம் தெரு, மூப்பனார் தெரு உள்பட பல பகுதியில் வாக்கு சேகரித்தார். அவருடன் விவசாய சங்கத் தலைவர் குமார், திமுக அவைத்தலைவர் கொம்பையா, தோணி அப்துல் காதர் உள்பட பலர் உடன் சென்றனர்.
தொடர்பானவை
October 4, 2024