செய்துங்கநல்லூரில் கடைகடையாக சென்று அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து விஜிலா சத்தியானந்தா எம்.பி. வாக்கு சேகரித்தார்.
கருங்குளம் ஒன்றியத்தில் அதிமுக சார்பில் 13 வது வார்டு மாவட்ட கவுன்சிலராக போட்டியிடும் பேச்சியம்மாள், வார்டு கவுன்சிலர் 11 வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் பொன்ராணி, 12 வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் ஒன்றிய அதிமுக செயலாளர் செங்கான் ஆகியோரை ஆதரித்து விஜிலா சத்தியானந்தா எம்.பி. வீதி வீதியாக சென்று வாக்கு சேகரித்தார். மேலும் கடைகளில் உள்ள வாக்காளர்களிடமும் அவர் வாக்கு சேகரித்தார். அப்போது அவர் நிருபர்களிடம் பேசியதாவது.
அதிமுக அரசு நலத்திட்டங்கள் மக்களுக்கு மிகவும் பிடித்துள்ளது. எனவே மக்கள் உள்ளாட்சியில் அதிமுகாவுக்கு வாக்களிக்க தயராகி விட்டனர். மேலும் நாங்கள் செய்த நல்ல காரியங்களை முன்வைத்து வாக்கு சேகரிக்கிறோம். அதற்கு மக்கள் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். என்று கூறினார்.
அவருடன் வேட்பாளர்கள் கருங்குளம் ஒன்றிய செயலாளர் செங்கான், பொன்ராணி கந்தசாமி, நெல்லை மாநகர மாவட்ட செயலாளர் தச்சை கணேஷ்ராஜா, பாப்புலர் முத்தையா, ஓ.பி. முஸ்தபா, அண்ணாமலை, அய்யப்பன், ராஜ் பாண்டியன், கள்ளவாண்டன், சங்கரபாண்டியன், பூவலிங்கம், ஸ்ரீவைகுண்டம நகர இளைஞரணி செயலாளர் முத்து குமார், முன்னாள் கவுன்சிலர் உடையார் உள்பட பலர் சென்றனர்.