வல்லநாட்டில் டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு பேரணி நடந்தது.
வல்லநாட்டில் டெங்கு காய்ச்சல் , கொசுப்புழு ஒழிப்பு , துண்டு பிரசுரங்கள் வழங்குதல் , நிலவேம்பு காசம் வழங்குதல் மற்றும் விழிப்புணர்வு பேரணி நடந்தது. வல்லநாடு தம்பிராட்டி அம்மன்கோயில் திடலில் நடந்த பேரணிக்கு முறப்பநாடு காவல் ஆய்வாளர் பார்த்தீபன் தலைமை வகித்தார். பின் பேரணியை துவங்கி வைத்தார். கருங்குளம் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கண்ணன், வல்லநாடு அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உதவி மருத்துவ அலுவலர் செலவகுமார் , மேல ஆழ்வார் தோப்பு கிராம உதயம் கிளை மேலாளர் வேல் முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கிராம உதயம் நிர்வாக இயக்குனர் டாக்டர் சுந்தரரேசன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். இந்த நிகழ்சசியல் வல்லநாடு பஞ்சாயத்து செயலாளர் சங்கர், கிராம உதயம் தனி அலுவர் இராமசந்திரன், தன்னார்வ தொண்டர்கள் அருணா, ஜெயபார்வதி, வினோத் உள்பட பலர் கலந்துகொண்டனர். தன்னார்வ தொண்டர் முத்துஈஸ்வரி நன்றி கூறினார். இதற்கான ஏற்பாடுகளை மேல ஆழ்வார் தோப்பு கிராம உதயம் மற்றும் வல்லநாடு அரசு ஆரம்ப சுகாதர நிலையம் இணைந்து நடத்தியது.


