நாகர்கோயில் சரலூரை சேர்ந்தவர் சரலூர் ஜெகன். இவர் பிரபல எழுத்தாளர். இவர் எழுதிய காக்காச்சி மற்றும் சப்பட்ட ஆகிய இரு நாவல் பிரபலமாக பேசப்பட்டது. சுமார் 60 சிறுகதைகளும் 1000க்கு மேற்பட்ட துணுக்குகளும் இவர் பல்வேறு நாளிதழ்களில் எழுதி வருகிறார். இவரது கவிதை தொகுப்புகள் மழைத்துளிகள், பாதை ஒன்று பாதச்சுவடுகள் 44 என்ற இரண்டு கவிதை தொகுப்பு நூல்கள் வெளிவந்துள்ளது. அது மட்டுமல்லாமல் இவர் பல்வேறு சமூக சேவைகளை செய்து வந்தார். நடிகர் சிவாஜி மன்றம் ஏற்படுத்தி பல்வேறு நலத்திட்டங்களை செய்து வந்தார். அதோடு மட்டுமல்லாமல் ரத்ததானமும் செய்து வந்தார். இவருக்கு பல்வேறு விருதுகள் கிடைத்து வருகிறது.
இதற்கிடையில் காந்தி மக்கள் இயக்கம் சார்பில் நாகர்கோயில் ஜெபமாலை மண்டபத்தில் மாற்று அரசியல் கருத்தரங்கம் நடந்தது. இந்த கருத்தரங்கில் பல்வேறு அமைப்பை சேர்ந்தவர்கள் பேசினர். நிகழ்ச்சியில் 73 முறை இரத்ததானம் செய்த சரலூர் ஜெகன் அவர்களுக்கு ‘அகிம்சை காந்தி 2019’ விருது வழங்கப்பட்டது. இந்த விருதை நிறுவனர் தமிழருவி மணியன் வழங்கினார். நிகழ்ச்சியில் இரா. கதிரேசன், வழக்கறிஞர் ஆகாஷ் தேவ் உள்பட பலர் கலந்துகொண்டனர். விருது பெற்ற சரலூர் ஜெகனை பலர் பாராட்டினர்.