வல்லநாடு அருகில் உள்ள கொம்புகார நத்தத்தில் காசநோய் விழிப்புணர்வு முகாம் நடந்தது. திருத்தியமைக்கபட்ட தேசிய காசநோய் தடுப்பு திட்டம், வல்லநாடு காசநோய் பிரிவு சார்பாக காசநோய் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நிகழ்ச்சி கொம்புகார நத்தம் ஹெக் சகான் நியூட்ரிசன் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் வைத்து நடந்தது. காசநோய் மருத்துவப்பணிகள் துணை இயக்குனர் டாக்டர் சுந்தரலிங்கம் தலைமை வகித்தார். மாவட்ட நலக் கல்வியாளர் தங்கவேல் முன்னிலை வகித்தார்.நிறுவனத்தில் இளநிலை நிர்வாகி சங்கரபாண்டி வரவேற்றார். காசநோய் விழிப்புணர்வு குறித்து துண்டு பிரசுரம் வழங்கப்படடது. இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மாவட்ட அரசு மற்றும் தனியார் துறை ஒருங்கிணைப்பாளர் மோகன், நிறுவனத்தில் மேலாளர் அருள்ராஜ் உள்பட பலர் கலந்துகொண்டனர். முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் அப்துல் ரகீம் ஹீரா நன்றி கூறினார்.