பாளையங்கோட்டை என்ஜிஓ காலனி செயிண்ட் சேவியர்ஸ் நர்சரி பிரேமரி பள்ளியில் நெல்லை , தூத்துக்குடி மாவட்ட காரத்தே வீரர்கள் அறிமுகம் மற்றும் பயிற்சி கூட்டம் நடந்தது. டாக்டர் பால்பாண்டி தலைமை வகித்து குத்துவிளக்கேற்றினார். காஞ்சி புரம் மாவட்ட கராத்தே மற்றும் சிலம்பம் குழு தலைவர் பெருமாள் முன்னிலை வகித்தார். பொருளாளர் சிவா வரவேற்றார். நிகழ்ச்சியில் காரத்தே வீரர்கள் அறிமுகம் சிலம்பம் பயிற்சி ஆகியவை நடந்தது. மாலையில் நடந்த நிறைவு விழாவிற்கு எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு தலைமை வகித்தார். நெல்லை மாவட்ட பொறுப்பாளர் ரோலின் வரவேற்றார். அதன்பின் சிலம்பு ,காரத்தே நிகழ்ச்சிகள் நிகழ்த்தி காட்டப்பட்டது. தூத்துக்குடி மாவட்ட பொறுப்பாளர்கள் «சுசு பட்டு, நிஷாந்து, ராம்குமார் உள்பட பலர் கலந்துகொண்டனர். நெல்லை மாவட்ட பொறுப்பாளர் மனோகர் நன்றி கூறினார். இதற்கான ஏற்பாடுகளை சோபாகாஸ் சிட்டோரியா காரத்தே பெட்ரேஷன் செய்திருந்தது.