முத்தாலங்குறிச்சி பத்திரகாளியம்மன் கோயிலில் திருவிளக்கு பூஜை நடந்தது. இதில் எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு கௌரவிக்கப்பட்டார். இந்த நிகழ்ச்சிக்கு ஊர் பிரமுகர் லட்சுமணன் தலைமை வகித்தார். பாலகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். பாரதிய சேவா சங்க சரஸ்வதி வரவேற்றார். மும்பை விஷ்வ இந்து பரிசத் பாண்டூப் பொறுப்பாளர் மாயாண்டி துவக்கி வைத்தார். மழை பெய்ய வேண்டி சிறப்பு விளக்குபூஜை நடந்தது. இதில் 108 பேர் கலந்துகொண்டனர். அகில இந்திய பாரதிய சபா ஏரல் சுப்புராஜ் சிறப்புரையாற்றினார். நவீன தாமிரபரணி மகாத்மியம் நூல் எழுதிய எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசுவை பாராட்டி ரூ 5 ஆயிரத்துக்கான காசோலை வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் துரைப்பாண்டியன், மாயாண்டி, லெட்சுமணன், நவீன் நல்லையா உள்பட பலர் கலந்துகொண்டனர். விசுவ இந்த பரிஷத் அறிவுகண் நன்றி கூறினார்.


