செக்காரகுடியில் தேசிய குடற்புலு நீக்க முகாம் நடந்தது.
தேசிய குடற் புலு நீக்க நாள் தூத்துக்குடி மாவட்டத்தில் நடந்து வருகிறது. 1 முதல் 19 வயது வரை உள்ளவர்களுக்கு வயிற்றுப் புலுவை நீக்கும் ‘அல்பண்டசோல்’ என்னும் மாத்திரை மொத்தம் 506806 பேருக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த மாத்திரை வழங்கும் முகாம் கீழசெக்காரகுடி அரசு மேல் நிலைப்பள்ளியில் வைத்து நடந்தது. மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் கீதா ராணி துவக்கி வைத்தார்கள்.
பள்ளியின் தலைமை ஆசிரியர் கிளாரா அமுத ராணி முன்னிலை வகித்தார்.
வட்டார மருத்துவ அலுவலர் மு.சுந்தரி வரவேற்றார்.
இந்த முகாமில் 733 பேருக்கு குடற்புலு நீக்க மாத்திரை வழங்கப்பட்டது. திட்ட மேலாளர் டாக்டர்.கன்னியம்மாள், செக்காரகுடி அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் பன்னீர் செல்வம், பள்ளியின் ஆசிரியர்கள், மாணவ, மாணவியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ஏற்பாடுகளை நேர்முக உதவியாளர் திரு.வடிவேல், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் பெரியசாமி, சுகாதார ஆய்வாளர் முத்துகுமார், கிராம சுகாதார செவிலியர் நிர்மலா தேவி மற்றும் மருத்துவமனை பணியாளர்கள் செய்திருந்தனர்.


