செய்துங்கநல்லூர் சேவியர் பாலிடெக்னிக் கல்லூரியில் இந்தி தேர்வு நடந்தது. இதில் 520 பேர் கலந்து கொண்டு தேர்வு எழுதினர்.
திருச்சி இந்தி பிரசார சபா சார்பில் தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூர் சேவியர் பாலிடெக்னிக் கல்லூரியில் ஆரம்ப நிலை இந்தி தேர்வான பிராத்மிக் தேர்வு நடந்தது. தலைமைக் கண்காணிப்பாளராக கல்லூரி முதல்வர் ஆவுடையப்பன் பணியாற்றினார். தேர்வு ஒருங்கிணைப்பாளர்களாக சந்திரசேகர், ஜான் செண்பத்துரை ஜான்பால், ஜோசப் சங்கீத மலரவன் உள்பட பலர் பணியாற்றினர். கல்லூரி ஆசிரியர்கள் ஆய்வகப் போதகர்கள் தேர்வு எழுதும் மாணவர்களை கண்காணித்தனர்.
ஏற்பாடுகளைக் கல்லூரி தாளாளர் டாக்டர் ஸ்டீபன் தலைமையில் செய்துங்கநல்லூர் பாலிடெக்னிக் பேராசியர்கள் மற்றும் அலுவலர்கள் செய்திருந்தனர்.
தொடர்பானவை
October 4, 2024