கருங்குளம் அருகே உள்ள தாதன்குளம் கிராமத்தில், கனமழை காரணமாக அதிக மழை பாதிப்பு இல்லை. ஆனாலும் சில வீடுகள் மோசமான நிலையிலிருந்தது. நேற்று இரவு தாதன்குளம் ஆர்.சி. கோயில் தெருவைச் சேர்ந்த தேவராஜன் என்பவர் வீடு இடிந்து விழுந்தது. இதில் அருகில் உள்ள ஆராக்கிய மேரி என்பவருக்குச் சொந்தமான ஆட்டோ நிறுத்தப்பட்டிருந்தது. இந்த ஆட்டோ இடிபாடுக்குள் சிக்கியது. இதுபோன்று பல வீடுகள் இடியும் நிலையில் உள்ளது. எனவே அரசு அதிகாரிகள் இவ்விடம் சென்று பாதிக்கப்பட்டவர்களுக்கு வேண்டிய உதவிகள் செய்ய வேண்டும் என பொதுமக்கள் கேட்டுள்ளனர்.


