கால்வாய் குளத்தில் அமலைச் செடிகளை அகற்றும் பணிகளை ஶ்ரீவைகுண்டம் எம்எல்ஏ ஊர்வசி அமிர்தராஜ் தொடங்கி வைத்ததால் தொடக்க
சாத்தான்குளம் சுற்றுவட்டார பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
வடகிழக்கு பருவமழை காரணமாக தாமிரபரணி ஆற்றின் கரையோரங்களில் தொடர்ந்து பெய்துவரும் மழையினால்
ஸ்ரீவைகுண்டம் அணையில் இருந்து வீணாக கடலுக்கு தண்ணீர் வெளியேறுகிறது.
இதனை அடுத்து வறட்சியான பகுதியான சாத்தான்குளம் சுற்றுவட்டாரப் பகுதி விவசாயிகளும் பொதுமக்களும் சடையநேரி கால்வாயில் தண்ணீர் திறந்து விட வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
ஸ்ரீவைகுண்டம் எம்எல்ஏ ஊர்வசி அமிர்தராஜ் பொதுப்பணித்துறையினரிடம் பேசி சடையநேரி கால்வாயில் தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுத்தார்.
இதன்படி வினாடிக்கு 400 கன அடி தண்ணீர் சடயனேரி கால்வாயில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
ஆனால் தண்ணீர் செல்லும் வழித்தடங்களில் அமலைச் செடிகள் ஆக்கிரமிப்பால் சடையநேரி கால்வாயில் தண்ணீர் செல்வதில் தடை ஏற்பட்டது.
இதனை, கால்வாய் பஞ்சாயத்து தலைவர் சேதுராமலிங்கம் திமுக தெற்கு ஒன்றிய செயலாளர் இசக்கி பாண்டியன் சாஸ்தாவி நல்லூர் விவசாய சங்கத் தலைவர் காமராஜ் செயலாளர் லூர்துமணி ஆகியோர் ஊர்வசி அமிர்தராஜ் எம்எல்ஏவின் கவனத்திற்குக் கொண்டு சென்றனர்.
இந்நிலையில் கால்வாய் குளம் மற்றும் ஏரி கால்வாய் ஆகியவற்றை நேரில் பார்வையிட்டு அமலைச் செடிகளை அகற்றும் பணிகளை ஊர்வசி அமிர்தராஜ் எம்எல்ஏ தொடங்கி வைத்தார்.
இதனால் கால்வாய் பகுதி விவசாயிகள், சாத்தான்குளம் சுற்றுவட்டார பகுதி விவசாயிகள் மற்றும் சடையநேரி கால்வாய் வழித்தட விவசாயிகளும் பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
முன்னதாக கால்வாய் குளத்துக் கரையோரத்தில் புதிய மரக்கன்றுகளை ஸ்ரீவைகுண்டம் எம்எல்ஏ ஊர்வசி அமிர்தராஜ் நட்டினார்.
இந்த நிகழ்ச்சியில் கருங்குளம் வட்டார காங்கிரஸ் தலைவர் புங்கன் தூத்துக்குடி தெற்கு மாவட்ட துணைத்தலைவர் கால்வாய் சிவசுப்பிரமணியன் கருங்குளம் இளைஞரணி கண்ணன்,
மாவட்ட இலக்கிய அணி தலைவர் சித்தார்த்தன் உட்பட பலர் கலந்து கொண்டனர்


