ஸ்ரீவைகுண்டம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பயனாளிகளுக்கான ரூபாய் 7 கோடியே 75 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா கருங்குளத்தில் நடைபெற்றது. விழாவிற்கு மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணபிரான் தலைமை தாங்கினார். சார் ஆட்சியர் சிம்ரோன் ஜீத் சிங் கலோன், வருவாய் கோட்டாட்சியர் தனப்பிரியா, மாற்றுத்திறனாளி நல அலுவலர் பிரம்ம நாயகம், கருங்குளம் ஊராட்சி ஒன்றிய தலைவர் கோமதி ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஸ்ரீவைகுண்டம் சமுக பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியர் ரமேஷ் வரவேற்று பேசினார். ஸ்ரீவைகுண்டம் தொகுதி எம்எல்ஏ வும் அதிமுக தெற்கு மாவட்ட செயலாளருமான எஸ். பி. சண்முகநாதன் விழாவில் பங்கேற்ற பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
விழாவில் வரன்முறை வீட்டுமனை பட்டா, பட்டா மாறுதல்கள், சமூக நல பாதுகாப்பு திட்ட உதவித்தொகை, புதிய குடும்ப அட்டை ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் வழங்கப்படும் இலவச வீட்டுமனைப் பட்டாக்கள், சமூக நலத்துறை சார்பில் வழங்கப்படும் திருமண நிதி உதவிகள், மாற்றுத்திறனாளிகளுக்கான மூன்று சக்கர வாகனங்கள் காதொலி கருவி உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களை ரூபாய் 7 கோடியே 75 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்ச்சியில் ஶ்ரீவைகுண்டம் தாசில்தார் கோபாலகிருஷ்ணன், ஏரல் வட்டாட்சியர் இசக்கி ராஜ், ஏரல் சமூக பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியர் லிங்கராஜ், மாவட்ட சமூக நல அலுவலர் தனலெட்சுமி, மாவட்ட அவைத் தலைவர் திருப்பாற்கடல், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் ஜீவரேகா, தூத்துக்குடி மாவட்ட கவுன்சிலர் பேச்சியம்மாள், கருங்குளம் ஊராட்சி மன்ற துணை தலைவர் லெட்சுமண பெருமாள், ஸ்ரீவைகுண்டம் தலைமையிடத்து துணை வட்டாட்சியர் சிவகுமார், ஏரல் மண்டல துணை வட்டாட்சியர் சேகர், அதிமுக சிறுவைகுண்டம் ஒன்றிய செயலாளர் காசிராஜன், ஸ்ரீவைகுண்டம் வருவாய் ஆய்வாளர் சிதம்பரநாதன், வல்லநாடு வருவாய் ஆய்வாளர் மாசாணமணி, தெய்வச்செயல்புரம் வருவாய் ஆய்வாளர் வெள்ளத்தாய், செய்துங்கநல்லூர் வருவாய் ஆய்வாளர் இருதயமேரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.


