செய்துங்கநல்லூர் வரதராஜ பெருமாள் கோயிலில் சண்முகப்பாண்டியன் நினைவுநாளை முன்னிட்டு 7 ஆம் ஆண்டு மாபெரும் மின்னொளி கபாடி போட்டி நடந்தது. இந்த போட்டியை செய்துங்கநல்லூர் இன்ஸ்பெக்டர் ராஜசுந்தர் தலைமை தாங்கி துவக்கி வைத்தார். கபடி போட்டி இரண்டு நாள் தொடர்ந்து நடைபெற்றது. இதில் முதல் பரிசை விவசாய சங்கதலைவர் குமாரும், இரண்டாம் பரிசை ஊராட்சி மன்றத்தலைவர் பார்வதி நாதனும், மூன்றாம் பரிசை சீனிவாசனும், நான்காம் பரிசை அரிமுத்துவும், ஐந்தாம் பரிசை சின்னத்துரையும், ஆறாம் பரிசை வெற்றிவேல் வெல்டிங் குருப், ஏழாம் பரிசை கொம்பையாவும், எட்டாம் பரிசை காளிராஜ் ஆகியோர் வழங்குகிறார்கள். இதற்கான கோப்பைகளை முறையே சிவசுப்பிரமணியன், கட்டளை அன்பு, வானு, சக்தி விக்னேஷ்வரன், சுடலைக்கண்ணுசுந்தரம், கேத்திரபாலன் என்ற கதிரேசன், மணித்தேவர் ஆகியோர் வழங்குகிறார்கள். துவக்கவிழா நிகழ்ச்சியில் பஞ்சாயத்து தலைவர் பார்வதிநாதன், விவசாய சங்க த்தலைவர் குமார், எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு, வெள்ளூர் பஞ்சாயத்து தலைவர் குமார் பாண்டியன், திருச்செல்வம், வி.கோவில்பத்து அந்தோணி குமார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
இரண்டாம் நாள் நடந்த விளையாட்டு போட்டியை ஊர்வசி அமிர்த்ராஜ் துவங்கி வைத்தார்.
விழாஏற்பாடுகளை பஞ்சாயத்து துணை தலைவர சுடலைமுத்து, வழககறிஞர் ஆச்சிமுத்து, சாது சிவசுப்பிரமணியன், பேச்சிமுத்து என்ற பிரபு தில்லை சிதம்பரம், பாலசுப்பிரமணியன் மற்றும் சண்முகம் ஸ்போர்ட்ஸ் கிளப், நேதாஜி ஸ்போர்ட்ஸ் கிளப் ஆகியவை செய்திருந்தனர்.


