கருங்குளம் ஒன்றியத்தில் சென்னை எஸ்ஆர்எம் பல்கலைக்கழகம் சார்பில் ஆறாம்பண்ணை ஊராட்சி பகுதியில் தேசிய குடும்ப நல கணக்கெடுப்புப் பணி நடைபெறுகிறது இந்த கணக்கெடுப்பு நடத்திய எஸ்ஆர்எம் கல்லூரி சார்பில் மேற்பார்வையாளர் அசோக் தலைமையில் களப்பணியாளர்கள் 7 பேர் வந்துள்ளனர் முதற்கட்டமாக வட்டார மருத்துவ அலுவலர் சுந்தரி ஆலோசனையின் பெயரில் ஆறாம் பண்ணையில் கணக்கெடுக்கும் பணி இன்று துவங்கப்பட்டது இப்பணியை பஞ்சாயத்து தலைவர் ஷேக் முகமது காதர் துவங்கி வைத்தார் இதில் மேற்பார்வையாளர் அசோக் தலைமையிலான களப்பணியாளர்கள் வீடுகளுக்கு சென்று வீட்டில் குடும்ப நிலவரங்கள் குறித்த விவரங்கள் மற்றும் தேவையான தடுப்பூசி குடும்ப கட்டுப்பாடு சிகிச்சை வீட்டில் கழிப்பறை அரசு சார்பில் வழங்கப்படும் சத்துமாவு ரத்த அளவு ரத்த அழுத்தம் உள்ளிட்ட கேள்விகளைக் கேட்டு பதிவு செய்து கொண்டனர் இதில் வல்லநாடு சுகாதார ஆய்வாளர் சாகிர் கிராம சுகாதார செவிலியர் ஜான்சி உட்பட அங்கன்வாடி பணியாளர்கள் கலந்து கொண்டனர் ஆறாம் பண்ணையில் நான்கு நாட்கள் இக்கணக்கெடுப்பு நடத்தி ஆய்வு முடிவை மத்திய அரசிடம் சமர்ப்பிக்க உள்ளதாக கணக்கெடுப்பு குழு தெரிவித்தனர்