செய்துங்கநல்லூர் திருவரங்கசெல்வியம்மன் கோயிலில் திருமால் பூஜை நடந்தது. இதையட்டி முதல் நாள் அம்மனுக்கு மாகாப்பு சாத்தப்பட்டது. மறு நாள் அதிகாலை பால்குடம் எடுத்து வரப்பட்டது. இந்த பால்குடம் சிவன்கோயிலில் , அன்னதான சத்திரம், தென்னஞ்சோலை தெரு, வேளார் கஸ்பா தெரு, மெயின் ரோடு, 1 வது வார்டு பிள்ளையார் கோயில் தெரு, விகோவில்பத்து வழியாக மீண்டும் கோயிலை வந்தடைந்தது. அங்கு சிறப்பு அபிசேகம் அலங்காரம் உச்சிகாலபூஜை நடந்தது. இரவு சிறப்பு பூஜை நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை செய்துங்கநல்லூர் விஸ்வகர்மா சமுதாயத்தினர் செய்திருந்தனர்.
Ðடம் உள்ளது.


