
செய்துங்கநல்லூரில் ஆதிச்சநல்லூர் வரலாற்று புத்தகத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு வழங்கிய எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு.
தூத்துக்குடி மாவட்டத்தில் வரலாற்று சிறப்புமிக்க இடம் ஆதிச்சநல்லூர். உலக நாகரீகம் இங்கு தான் தோன்றியதாக கூறப்படுகிறது. கடந்த ஆண்டு ஆதிச்சநல்லூரில் தமிழக அரசு சார்பில் தொல்லியல் அகழாய்வு பணிகள் நடந்தது. இந்த அகழாய்வு பணியில் ஏராளமான பழங்கால பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டது.
இந்நிலையில் ஆதிச்சநல்லூரில் கடந்த ஆண்டுகளில் நடந்த ஆய்வுகள் குறித்தும், ஆய்விற்காக நீதிமன்றம் எடுத்த நடவடிக்கைகள் குறித்து வரலாற்று எழுத்தாளரும், ஆதிச்சநல்லூரில் அகழாய்வு பணிகள் நடைபெற வேண்டும் என்று உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடர்ந்தவருமான எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு ஆதிச்சநல்லூர் வழக்கு எண் 13096/2017 என்ற வரலாற்று புத்தகத்தை எழுதினார். இந்த நூலை தி இந்து தமிழ் திசை பதிபகம் வெளியிட்டது. ,
செய்துங்கநல்லூருக்கு வருகை தந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமாரிடம் ஆதிச்சநல்லூர் வழக்கு எண் புத்தகதை வரலாற்று ஆய்வாளர் எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு வழங்கினார். ஆய்வு குறித்து எழுத்தாளரிடம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கேட்டறிந்தார். அவருடன் ஸ்ரீவைகுண்டம் துணை காவல் கண்காணிப்பாளர் வெங்கடேஷ், செய்துங்கநல்லூர் ஆய்வாளர் ராஜசுந்தர் உள்பட பலர் கலந்து கொண்டனர்