கோவா வில் கடந்த 2006 ல் தில்லாரி நதி நீர் பாசனத்தில் மிகப்பெரிய பதவியான நீர் பாசன கழகத்தின் நிர்வாக இயக்குனராக பணியாற்றியவர். இதுபோன்ற பல்வேறு பதவிகள் வகித்த பரமசிவன் தற்போது ஓய்வு பெற்று கோவாவில வசித்து வந்தார். ஆனாலும் செய்துங்கநல்லூர், முத்தாலங்குறிச்சி, ஆழ்வார்கற்குளம், ஆழிகுடி உள்பட பல ஊர்களில் கோயில் திருப்பணிகள் பல செய்து வந்தார்.
இவர் சீறுநீரக நோயினால் பாதிககப்பட்டார். தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட அவர் நேற்று முன்தினம் காலமானார். இவரது உடல் சொந்த ஊரான தூத்துக்குடி மாவட்டம் முத்தாலங்குறிச்சி கிராமத்துக்கு கொண்டு வரப்பட்டது. அங்கு பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது. அதன் பின் தாமிரபரணி ஆற்றங்கரையில் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது. ஓய்வு பெற்ற நீதிபதி ராமலிங்கம், ஓய்வு பெற்ற சப்கலெக்டர் வரதராஜன், திருநெல்வேலி அகில இந்திய வானொலி அறிவிப்பாளர் கரைசுற்றுப்புதூர் கவிபாண்டியன், எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு, தேவேந்திர கிங், முன்னாள் பஞ்சாயத்து தலைவர்கள் ராஜாமணி, கந்தசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர். கோவாவின் தலைமை பொறியாளர் பரமசிவன் மறைவு கிராமத்தினரை சோகமடைய வைத்தது.