ஸ்ரீவைகுண்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த முகாம் விழிப்புணர்வு குறும் படம் வெளியிடப்பட்டது.
ஸ்ரீவைகுண்டம் தாலூகா அலுவலகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த முகாம் விழிப்புணர்வு குறும் படம் வெளியிடப்பட்டது. இந்த நிகழ்சிக்கு ஸ்ரீவைகுண்டம் சட்டமன்றத் தொகுதி உதவி வாக்காளர் பதிவு அலுவலர் மற்றும் ஸ்ரீவைகுண்டம் வட்டாட்சியர் இரா. கோபாலகிருஷ்ணன் தலைமை தாங்கி குறும்படத்தினை வெளியிட்டார். தேர்தல் வட்டாட்சியர் சிவகுமார் பெற்றுக்கொண்டார். அதன் பின் அங்குள்ள பொதுமக்களிடம் வாக்களிக்க பெயர் சேர்க்கும் முறை குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்சியில் வருகிற 12, மற்றும் 13 ந்தேதி களில் அந்தந்த வாக்குசாவடியில் பெயர் மாற்றம் மற்றும் நீக்கத்தினை செய்து கொள்ளலாம். பெயர் சேர்க்க 6 ம் படிவம், பெயர் நீக்க படிவம் 7, பெயர் மற்றும் புகைப்படம் திருத்த படிவம் 8, ஒரே தொகுதியில் முகவரியை திருத்த படிவம் 8ஏ, அயல் வாழ் இந்திய வாக்காளர்களுக்கு படிவம் 6 ஏ என்று படிவத்தினை நிரப்பி கொடுத்து வாககாளர்கள் தங்கள் பெயர்களை திருத்திக் கொள்ளலாம் என தாசில்தார் கோபாலகிருஷ்ணன் கூறினார். இந்த நிகழ்சியில் அபிஷ் விக்னேஷ் மற்றும் படத்தில் நடித்த கோபால் ஆகியோர் தாசில்தார் கோபாலகிருஷ்ணன் மூலமாக கௌரவிக்கப்பட்டார்கள்.
இந்த நிகழ்ச்சியில் எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு, மணக்கரை போஸ்ட் மாஸ்டர் காளிமுத்து உள்பட பலர் கலந்துகொண்டனர்.


