தென்காசி மாவட்டம் கடையம் அருகில் உள்ள தோரணமலை முருகன் கோயில் பரம்பரை தர்மகர்த்தா ஆதிநாரயணன் நினைவாக தோரண மலையான் விருது வழங்கப்பட்டது.
வருடந்தோறும் சித்திரை மாதம் 1 ந்தேதி வேளாண்மை சிறப்பாக நடைபெற முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிசேகம் மற்றும் தோரண மலையான் விருது வழங்கப்படும். இந்த ஆண்டு கொரானா நோய் தாக்குதல் காரணமாக இந்த நிகழ்ச்சி அக்டோபர் மாதம் 16 ந்தேதி நடந்தது. இதில் சிறப்பு பூஜை நடந்து முடிந்த பின் ஆதிநாரயணன் நினைவாக தோரண மலையான் விருது 6 பேருக்கு வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சிக்கு கோயில் பரம்பரை தர்மகர்த்தா செண்பகராமன் தலைமை வகித்தார். எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு முன்னிலை வகித்தார். திரைப்பட இயக்குனர் அன்பழகன் விருதுகளை வழங்கினார்.
இயற்கை ஆர்வலர் விருது ஆறாம்பண்ணை சேக்அப்துல்காதருக்கும், கொரேனா பாதுகாப்பாளர் விருது சரலூர் ஜெகன், சுற்றுபுறசூழல் விருது செய்துங்கநல்லூர் பார்வதி நாதனுக்கும், ஆன்மிகச் செம்மல் விருது சங்கரபாண்டியன் அவர்களுக்கும், பனை கலைச்செல்வர் விருது பால்பாண்டி அவர்களுக்கும், சமூக ஆர்வலர் விருது சுடலை முத்து, ஆகியோருக்கு வழங்கப்பட்டது.