
தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் ஜெயராஜ் அன்னபாக்கியம் பொறியியல் கல்லூரி கணிணி பிரிவு மாணவி மிஸ்பா என்பவர் ‘நம்ம நாசரேத்’ என்ற செயலியை உருவாக்கியுள்ளார். இந்த செயலியானது அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்யும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இதனை பாராட்டும் வகையில் கல்லூரி தாளாளர் சசிகரன் மற்றும் முதல்வர் ஜெயக்குமார் ஆகியோர் பாராட்டி சான்றிதழ் வழங்கினார்.
நாசரேத்துடன் தொடர்புடையவர்களுக்கு தினம் தினம் தேவையான தகவல்களை இதில் பெறலாம். அவசர நிலையின் போது தேவைப்படும் தொடர்பு எண்களும் இதில் இருப்பதால் மற்றவர்கள் உதவியின்றி சூழ்நிலைகளை கையாள தேவையான தகவல்கள் நம் கைக்குள் அடங்கிவிடும்.
சிறப்பம்சங்கள்:
1. கட்டணம் கிடையாது. முற்றிலும் இலவசம்.
2. இது ஒரு அகல்நிலை செயலி (Offline App) இதை உபயோகிக்க இன்டர்நெட் தேவையில்லை.
* வெளி இடங்களிலிருந்து நாசரேத் வருகிறீர்களா?
* உங்களை விமான நிலயத்திலிருந்தோ, தொடர்வண்டி நிலயத்திலிருந்தோ அழைத்துச் செல்ல டாக்சி, வேன் ஆட்டோ, லாட்ஜ் முதலியவற்றை நீங்கள் கிளம்பும்போதே தொடர்பு கொண்டு ஏற்பாடு செய்ய தேவையான தகவல்கள் இந்த செயலியில் இருக்கிறது.
* உங்கள் வயதான பெற்றோர்கள் நாசரேத்தில் வசிக்கிறீர்களா?*நீங்கள் தொலை தூரத்திலிருந்தே அவர்களுக்கு தேவையான மளிகை பொருட்கள், காய்கறிகள், பழங்கள், மாத்திரைகள் போன்றவற்றை சம்பந்தப்பட்ட கடைகளை தொடர்புகொண்டு வீட்டிற்கே கொண்டுபோய் கொடுக்க ஏற்பாடு செய்யலாம்.
இந்த செயலி உங்களில் பலருக்கு உபயோகமாக இருக்கும் என நம்புகிறோம். இதை பதிவிறக்கம் செய்ய கீழே உள்ள இணைப்பை பயன்படுத்தவும். இந்த செயலி உங்களுக்கு பயனுள்ளதாக இருப்பதாக உணர்ந்தால் விமர்சன பகுதியில் 5 நட்சத்திர தகுதியை கொடுத்து உங்கள் பாராட்டை தெரிவிக்கலாம்.
https://play.google.com/store/apps/details?id=com.nammanazareth.drawerapp
அதோடு இதன் நிறைகளை உங்கள் நண்பர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள். குறைகள் இருப்பதாக உணர்ந்தால் அதை தயவுசெய்து ரிவ்யூ பகுதியில் பதிவிடாமல் இதை ஆக்கியவருக்கு வாட்சப் (9488 182 183) மூலமாகவோ ஈமெயில் ([email protected]) மூலமாகவோ தயவுசெய்து தெரியப்படுத்துங்கள்.
இது ஒரு அறிமுகப் பதிப்பாக இருப்பதால் முழுமை பெறாத தகவல்கள் இருக்கலாம். உங்கள் நினைவுக்கு இதில் விடுபட்ட தகவல்கள் இருந்தால் பகிர்ந்து கொள்ளுங்கள். அதோடு இந்த செயலியில் பட்டியலிடப்படாத தொழில் முனைவோர் வாசற்படி வியாபாரிகள் முகவரி இல்லாத தொழிலாளர்கள் இருந்தாலும் தயவுசெய்து பகிர்ந்து கொள்ளுங்கள்.