
தூத்துக்குடி மாவட்டம் ஏரல் நகர அதிமுக சார்பில் இதய தெய்வங்களின் நல்லாசியுடன் கழக ஒருங்கிணைப்பாளர்கள் மாண்புமிகு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ பன்னீர்செல்வம் ஆகியோரின் வழிகாட்டுதலின்படி 49ம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு மாபெரும் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இப்போட்டியை ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகநாதனின் மகன் எஸ்.பி.எஸ்.ராஜா தலைமையேற்று தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் அழகேசன், பெருங்குளம் ராஜா,V.G. சரவணன் மற்றும் M.முத்துவேல் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். மேலும் இக் கிரிக்கெட் போட்டியை காண நூற்றுக்கணக்கான மக்கள் சமூக இடைவெளியுடன் மாஸ்க் அணிந்து கலந்து கொண்டனர்.