செய்துங்கநல்லூரில் மின் தட்டுபாடு காரணமாக கூடுதலாக இரண்டு டிரான்ஸ்பர்மர் அமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
செய்துங்கநல்லூர் வளர்ந்து வரும் கிராமமாகும். இந்தகிராமத்துக்கு பஸ் வசதி, இரயில் வசதி, தண்ணீர் வசதி சிறப்பாக இருக்கும் காரணத்தினால் மிக அதிகமான மககள் இங்கு வந்து குடியேறுகின்றனர். இதனால் செய்துங்கநல்லூரில் குடியிருப்புகள் அதிகரித்துள்ளது. வீடுகள் மற்றும் தொழில் , வியாபார ஸ்தலங்கள் கூடிக்கொண்டிருக்கிறது. இங்கு இயங்கும் பாராம்பரியம் மிக்க வராசந்தை வாரத்துக்கு ஒரு முறை கூடுகிறது. இந்த சந்தையில் பல ஆயிரம் மக்கள் கூடுகிறார்கள். ஆனாலும் இப்பகுதியில் அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. இதனால் செய்துங்கநல்லூர் சந்தை அருகிலும், செய்துங்கநல்லூர் ரயில் நிலையம் அருகிலேயும் கூடுதலாக இரண்டு டிரான்ஸ்பார்மர் அமைத்து தர நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


