
ஆதிச்சநல்லூர் – சிவகளையில் குமார் ஜெயந்த ஐ.ஏ.,எஸ் பார்வையிட்டார்.
ஆதிச்சநல்லூரில் கடந்த மே 25ம் தேதி அகழாய்வு பணி துவங்கி கடந்த மாதம் 30ம் தேதியுடன் நிறைவடைந்தது. இந்த அகழாய்வு பணியில் 27 முதுமக்கள் தாழிகளும், தமிழ் பிராமி எழுத்துக்கள் கொண்ட பானை ஓடுகளும், நெல்மணிகள், அரிசி, மனிதனின் எலும்பு கூடுகள் என ஏராளமான பழங்கால பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டது.
தற்போது பொருட்களை ஆவணப்படுத்தும் பணி நடந்து வருகிறது. இந்நிலையில் ஆதிச்சநல்லூர் அகழாய்வு பணிகள் நடந்த இடத்தை பார்வையிட தூத்துக்குடி மாவட்ட வடக்கிழக்கு பருவமழை கண்காணிப்பு அலுவலர் குமார் ஜெயந்த் ஐ.ஏ.எஸ் வருகை தந்தார். அவர் அகழாய்வு பணிகள் நடந்த இடம் மற்றும் கண்டெடுக்கப்பட்ட பொருட்களையும் பார்வையிட்டார்.
அவருடன் மாவட்ட சார் ஆட்சியர் சிம்ரான் ஜித்சிங் ஹாலோன், தூத்துக்குடி மாவட்ட பயிற்சி உதவி காவல் கண்காணிப்பாளர் அபிஷேக் குப்தா, தூத்துக்குடி மாநகராட்சி ஆணையாளர் ஜெயசீலன் உடன் வந்தனர்.
சிவகளையில் தொல்லியல் களத்தினை குமார் ஜெயந்த் பார்வையிடும் போது அகழாய்வு இயககுனர் பிரபாகரன், தங்கதுரை ஆகியோர் விளககமளித்தனர்.
ஏரல் வட்டாச்சியர் இசக்கிராஜா, கிராம நிர்வாக அதிகாரி அனிதா, சிவகளை பஞ்சாயத்து தலைவர் பிரதிபா, சிவகளை ஆசிரியர் மாணிக்கம், முத்துகுமாரி, வெங்கடேஷ், மதிவாணன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
ஆதிச்சநல்லூரில் அகழாய்வு நடந்த இடத்தினை பார்வையிட்ட குமார் ஜெயந்த் தொடர்ந்து புளியங்குளம் முதுமக்கள் தாழி மையத்தில் வைக்கப்பட்ட பொருள்களை பார்வையிட்டார். தூத்துக்குடி மாவட்ட தொல்லியல் அலுவலர் லோகநாதன் விளக்கமளித்தார். ஸ்ரீவைகுண்டம் வட்டாச்சியர் கோபாகிருஷ்ணன், ஆதிச்சநல்லூர் முன்னாள் பஞ்சாயத்து தலைவர் சங்கர்கணேஷ், எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு, கிராம நிர்வாக அதிகாரிகள் ஆதிச்சநல்லூர் லூர்து பிரான்சிஸ், கருங்குளம் மணிமலா, முத்தாலங்குறிச்சி கந்தசுப்பு உள்பட பலர் கலந்துகொண்டனர்.