செய்துங்கநல்லூரில் ஊட்டச்சத்து மாதவிழா நடந்தது. கருங்குளம் வட்டாரம் செய்துங்கநல்லூர் ஊட்டச்சத்து மையத்தில் ஊட்டச்சத்து மாதவிழாவை முன்னிட்டு விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.
செய்துங்கநல்லூர் பஞ்சாயத்து தலைவர் பார்வதிநாதன் தலைமை வகித்தார். சமூக ஆர்வலர் சுடலை முன்னிலை வகித்தார். கருங்குளம் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலகத்தினை சேர்ந்த வட்டார உதவியாளர் ஜெரோம் சிறப்புரையாற்றினார். பஞ்சாயத்து எழுத்தர் சங்கரபாண்டியன், மேற்பார்வையாளர் கமலம் உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் காய்கறிகள் மூலம் ஓவியங்கள் வரையப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சியில் பொதுமக்கள், குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள் கலந்துகொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் உதவியாளர்கள் செய்திருந்தனர்.


